உறவுகளோடு உறங்கச் சொல்லும்,
உணர்வுகளைப் பகிர்ந்துக் கொள்ளவே!
ஓடிக்கிடக்கும் அடங்காச் சிந்தனைக்கு
ஒப்புதலின்றி ஓய்வுக் கொடுக்கும்!
கண்களே காதல் செய்யும்
கருநிறக் கண்ணன்!
இரவு....
நிலவின் அழகைக் காட்டும்,
நெஞ்சமெல்லாம் நிம்மதி கொடுக்கும்,
தேவைப்பட்டால் தட்டிக் கொடுக்கும்!
அமைதியில் தாலாட்டுப் பாடும்,
அற்புதம் செய்யும்!
கனவுகள் விதைக்கும்,
கற்பனைகள் கொடுக்கும்!
இவன் வருகை தந்தால்,
நட்சத்திரங்களே ஒன்றுகூடி கைகள் தட்டும்!
Yorumlar