காயம் கொண்ட உள்ளத்திற்கு
இயற்க்கை கொடுத்த வரம்!
சிலருக்கு அமைதி கொடுக்கும்,
சிலரைத் தட்டிக் கொடுக்கும்!
தூண்டில் போட்டு நம் கைகள் பிடித்து,
துயரக் கடலைக் கடக்கச் செய்யும் தூதன்!
எதிர் கொள்பவரை கோமாளியாகவும்,
எதிரில் நிற்பவரை ஏமாளியாகவும் காட்டும் யுக்தி உடையவன்!
உன்னை போற்றுபவரும் உண்டு,
உன்னுடன் போரிடுபவரும் உண்டு!
வேடிக்கை காண்பிக்கும் வேந்தன் நீ!
ஆயிரம் குறை கூறினாலும்,
முற்றும் தெரிந்தவனின் அகங்காரத்தை சீண்டிப் பார்க்கும்
முதுமை நாட்டின் அதிபதி!
நொடியில் மாயம் செய்யும் மாயாவி!
Comentários