இறைவன் கொடுத்த முதல் வரம் நீ!
வலிகள் பல கடந்து,
இப்புவி காண அழைத்தாயே,
தனக்கென ஒருபோதும்,
உன் மனம் என்றும் நினைக்காதே!
உன் மனம் புரியாது,
சில சமயம் சினம் கொண்டேனே,
அதை பொருட்படுத்தாமல்,
அன்பாக அரவணைத்தாயே!
உறவெல்லாம் உமக்கு வலி கொடுத்தாலும்,
சுமைதாங்கியாய் நின்று எதிர்கொண்டாயே!
உன் அருமை உணர,
இயற்கை விதித்த முதிர்ச்சியோ தாமதம்..
நினைத்துப் பார்த்தால்,
நீ கடந்த பாதையோ வெகு தூரம்!
இன்று என் விழி இரண்டில்,
சிறு ஈரம்,
விறல் தானாக வரையுதே,
எழுதுக் கோலம்!
நான் வெற்றி பெறும் நொடிகள் எல்லாம்,
உனக்கு என்றும் சொந்தமே,
என் உயிருள்ள வரை உனைக் காப்பேன்,
என்றும் உன் கண்ணனே!
அன்னையர் தின வாழ்த்துகள்!
Comments