மனிதன் வாழ்வில் தவிர்க்க முடியா உணர்வு!
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே,
பிணைந்து உறவாடும் அற்புதத் தீ!
எதிர்பாரா தருணத்தில் நம்மை எதிர் நோக்கிப் பாயும்,
எதிர்கொள்ளும் திறனை இதயம் தானாய் அடையும்!
காதல்..
இதழோரப் புன்னகைத் தரும்,
இதயத் துடிப்பை இயக்கும்,
இன்ப மழை பொழியும்!
நம்மைச் சுழற்றிப் போடும்,
சிணுங்க வைக்கும்,
ஓயாத சிந்தனை தரும்!
நம் உறக்கம் கெடுக்கும்,
உணர்வைத் தூண்டும்,
உள்ளத்தை சுத்தியால் அடிக்கும்!
நம் உயிருள்ள வரை நம்மை அரவணைக்கும்!
சில சமயம் வலி கொடுக்கும்,
சிலருக்கு வழி வகுக்கும்!
காதல் நுழைந்தால்,
மதி, மனம், இவை இரண்டும் முட்டிக்கொள்ளும்!
வந்தவர்கள் விடைபெற்றுப் போயினும்,
விட்டுச் சென்ற காதல் நம் மனதோரம் குடியிருக்கும்!
காதலர்(கள்) இல்லை எனிலும்,
காதல் கதைகள் உமக்குத் தேவை!
கதை மாந்தர்(கள்) நூறு எனினும்,
கதையின் அம்சங்கள் போதும்,
கப்பல் கவிழ்ந்து விடாமல்,
கடலைக் கடந்து விடும்!
Comments