இயற்கையுடன் உறவாட இறைவன் கொடுத்த இசைக்கருவி!
நிஜத்துக்கும் நிழலுக்கும் நடுவில் நிற்கும் அழகுப் பாலம்!
கவிதை....
காதல் பேசும்,
கோபம் பேசும்,
துக்கம் விசாரிக்கும்,
தூக்கம் கெடுக்கும்,
சிரிக்க வைக்கும்,
சிந்திக்க வைக்கும்,
முத்தம் கொடுக்கும்!
சில நொடிகளில் நம் கண்ணீருக்குச் சொந்தமாகும்,
சில நொடிகளில் நம் கற்பனைக்குச் சொந்தமாகும்!
நம்மை அரவணைக்கும்,
அமைதிக் கொடுக்கும்!
கவிதை....
அறிவியல் பேசும்,
அறிவுக்கதவைத் திறக்கும்,
அகங்காரத்தை உடைக்கும்!
சங்கத்தமிழ் பேசும்,
சந்தோஷம் கொடுக்கும்,
சரித்திரம் படைக்கும்,
சமாதானம் செய்யும்!
கவிதைக்குக் காதல் போதும்,
காதலி தேவையில்லை!
எண்ணங்களின் வெளிப்பாடே,
எழுத்துக்களாய் பிரதிபலிக்கும்!
Comments