என் அருகே அமர்ந்த தோழியோ,
அவள் மனம் திறந்து அன்பை உரைக்க,
அதை கண்டறிந்த அழகு பாவையோ,
அந்நொடியிலே தன் காதல் உணர்ந்தாள்!
பொறமைக் கொண்ட இவள் விழிகளோ,
பூமியை நோக்கி அமைதி காக்க,
பெண்ணின் மௌனம் அறிந்து அஞ்சிய நானோ,
குழப்பத்தில் சிக்கித் தவித்தேன்!
நாழி கடந்தே உணர்ந்தேன்,
கள்ளத்தனமாய் மகிழ்ந்தேன்!
இவள் இதழ்கள் மூடி மறைத்த காதலை,
இரு கண்களே காட்டிக்கொடுத்தது!
அன்பைச் சொல்ல ஆசைகள் இருப்பினும்,
அமைதி காக்க ஆயிரம் காரணம் பிறந்தது!
முன்பே சந்தித்திருந்தால்,
இவளிடம் ஆயுள் கைதியாய் ஆகி இருப்பேன்!
என் காதல், காலத்தின் நண்பன்!
இப்பிறப்பில் இல்லையெனிலும்,
மறுபிறப்பில் இதயங்கள் இரண்டும் இணையும்!
コメント