உன் கண்களைக் கொஞ்ச ஓடி வந்த காலைக் கதிரொளி,
என் ஜன்னல் கதவைத் தட்டும்!
நீ உறங்கும் அழகைக் கண்ட பின்னே,
அது தரையில் மயங்கி விழும்!
மதி திரும்பும் வரை காத்துக்கிடந்து,
உன் மடியிலே தவழும்!
உன் வியர்வையைக் கண்ட குளிர் தென்றல்,
மனை வாசலை அடையும்!
உன் சுவாசப் பாதையை அறிந்த உடன்,
அதைத் தொட்டு வணங்கும்!
அழகு இதயம் அடைந்து திரும்பிய பின்னே,
அது சுத்தம் அடையும்!
அகல் விளக்கை ஏற்றி அழைத்த நிலவோ,
நம் வானில் மிதக்கும்!
இரவின் இருள் போக்கி உன் முகம் காண,
நிலவொளி வீசும்!
பெண்ணழகைத் திருடி சுகம் காணவே,
அது இரவு முழுதும் ஏங்கும்!
Comentarios