நிறம் என்பது மாயை,
நிஜம் என்பது நீயே!
உன் உள்ளம் ஒளியாக திகழ,
உன் உருவம் ஓவியம் ஆகும்!
மனம் உண்மை காதலைக் காண,
கண் எதிரே இருப்போர் காவியம் ஆவர்!
உன் விழி இரண்டும் இவரைத் தேட,
சிறு அசைவும் அழகாய் தோன்றும்!
உணர்வெல்லாம் பரிமாறிக்கொள்ள,
பகல் இரவும் தினம் புதிதாக மாறும்!
இனி இரு உயிர் ஓர் உயிராய் மாற,
உம் இருவருக்கும் பல உயிர் பிறக்கும்!
அவை ஒவ்வொன்றும் உம் சான்றாக வாழ,
வாழ்வென்பது கவியாக மாறும்!
Comments