அவள் நினைவில் இருந்து
தப்பிச் செல்ல இயலவில்லை,
தடுத்துக் கொள்ள முயன்றேன்!
மறப்பதற்கு வழியும் இல்லை,
மன்னித்துவிட்டு நகர்ந்தேன்!
சாய்ந்துகொள்ள தோளும் இல்லை,
தலையணை போதும் என அழுதேன்!
தவித்து நின்ற தமயனுக்கு,
தாயாய் மாறி தட்டிக்கொடுத்தாய்,
கண்ணீர் துடைத்தாய்!
இன்று,
சிரித்து மகிழ நேரம் போதவில்லை,
சிறு தூரத்தில் இருக்கிறாய்!
மலை, கடல் கடந்து வந்தடைவேன்,
இனி உன்னுடன் சேர்ந்து என் மருமகனும் எனது உறவு!
Comments