இரவோடு இரவாக உறவாடும் இரு மனம் இணைந்திட,
இதழ் மேல் இதழ் உறங்கும்!
அடி மேல் அடி வைத்து இரு பாதங்கள் தூரம் சென்றிட,
உன் நினைவில் என் இதயம் நனையும்!
காற்றோடு காற்றாய் உன் சுவாசம் கலந்திட,
இனி உலகெல்லாம் வாசம் பெறும்!
கண்ணோடு கண் முட்டிக் கொண்டு கதைத்திட,
ஓயாத கடல் அலைகளும் நின்று ரசிக்கும்!
கதையோடு கதையாக இருந்திட,
நம் காதல் ஒன்றும் சிறுகதை அல்ல,
இதோர் இலக்கணம்!
Comments