உன் வருகையை கூறிய பின்னே,
என் வானிலை அறியா வாசல் கதவுகள் மஞ்சள் அள்ளிப் பூசும்!
கண்கள் உன்னைக் கண்ட உடன்,
காத்திருந்த கைகள் கட்டி அணைக்கும்!
நீ அருகில் அமரும் முன்னே எச்சரிக்கை வேண்டுமென,
நெஞ்சம் இன்று நிபந்தனைக் கூறும்!
இல்லையெனில்,
தரையில் திகழும் நிழலும் நடுங்கித் தவிக்கும்!
போர்த்திக் கொள்ள போர்வைத் தேடும் நேரம்,
உன் பார்வை பட்டு அனல் காற்று வீசும்!
வார்த்தை இல்லாமல் வெட்க மழை பெய்யும் நேரம்,
கன்னம் இரண்டும் முத்தத்தில் மிதக்கும்!
களைத்துப்போன உன் இதயம் உறங்கும் நேரம்,
என் தோள்கள் உமக்குத் தலையணையாய் மாறும்!
இத்தருணம் கடத்திய கடிகார நண்பனோ,
இறுதியில் காதல் கவி பாடும்!
Комментарии