கெஞ்சிக் கேட்டுக் கிடைப்பது காதல் அல்ல,
அள்ளிக் கொடுத்துக் கெஞ்சுவதும் காதல் அல்ல!
பேசிப் புரிய வைப்பது காதல் அல்ல,
பேச்சின் தேவையை நாடுவதும் காதல் அல்ல!
காதல்,
மனதை உருக்கும்,
மனதைக் குழப்பும்!
அமைதியில் பேசும்!
துண்டான ஓர் இதயம்,
மீண்டும் ஒன்றாக ஆகும்,
இவன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்ட பின்னே!
எந்நாளும் இவன் நம்மோடு செய்யும் பயணம்,
ஒரு வித மாயாஜாலமே!
துணையாக நிற்கத் தயக்கம் இல்லாத இவன்,
நம் வாழ்வாதாரமே!
இவனோடு இருக்கும் நொடிகள் எல்லாம் இங்கு,
வாழ்வின் கீதமே!
எனினும் இவனைக் கொண்டாட ஒரு நாள் என்பதும்,
வெறும் கஞ்சத்தனமே!
மூச்சுக்காற்றோடு இவனை சுவாசிக்கும் நான்,
ஒரு காதல் ஜீவனே!
நேரம் பார்க்காமல் காதலை நேசியுங்கள்!
ஏனெனில்,
காதல் உங்களை அடைய,
நேரம், காலம் பார்ப்பதில்லை!
காதலர் தின வாழ்த்துகள்!
コメント