அடைக்கலம் கிடைக்குமா உன் அழகு கண்களில்?
அமைதியாய் ஆனந்தம் கொள்வேன்!
பூவிழிகளோ பூங்காவனமோ,
புரியா புதிரே!
சுற்றி வெளிச்சம் இருப்பினும், சிறிதளவு இருட்டு..
சிதைந்து போகிறேன்!
சிந்தனை முழுதும் நீயே, இங்கு செத்துப்பிழைக்கிறேன்!
உன்னதமும் கண்டேன்,
உண்மையும் கண்டேன்!
வேறென்ன வேண்டும் இந்த ஆண் மகனுக்கு?
காணும் இடமெல்லாம் உன்னை தேடுகிறேன்,
கண்கள் விழித்திருக்கும் வரை!
காதலே காட்டிக்கொடுக்கும்..காத்திருக்கிறேன்!
ความคิดเห็น