கால்கள் முளைத்த நிமிடங்கள் சற்று நிற்காதோ?
கயல்விழி உன்னை ரசித்துக்கொள்வேன்!
ஒன்றல்ல இரண்டல்ல..
ஓராயிரம் கனவுகள், உன்னுடன் ஒட்டிக்கொண்டு வாழ!
கடந்து போகும் ஒவ்வொரு நொடியிலும்,
கால்கள் பதித்து செல்கிறாய்!
என் நாட்களின் முதலும் நீ, முடிவும் நீ,
என்னை முழுதாய் கடத்தி விட்டாய்!
எனக்கே தெரியாமல் என்னை ரசித்தவள் நீ,
என்ன புண்ணியம் செய்தேன்!
தோள் கொடுத்து தூக்கி விட்ட தோழியே, உன்
தோளில் சாய்ந்து தூங்கவா?
துவண்டு போய் நின்ற போதெல்லாம்,
தேவனின் தூதாய் வந்து தட்டிக் கொடுத்தாய்!
எங்கு சென்றாலும் என் தேடல் நீதானே!
என்ன செய்வேன் உன் போல் பெண்ணை பார்த்த பிறகு?
விதியால் பிரிந்திருக்கோம், எனினும் வலி இல்லை
உன் தோழமையே போதும்!
எல்லை மீறி செயல்பட நாம் சிறு பிள்ளை இல்லை
எண்ணம் போல் தானே வாழ்க்கை..
இயற்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் உண்டு!
இந்நாளும் எந்நாளும் நம் கண்ணியமே நமது முதல் பிள்ளை!
பெருமிதம் கொள்கிறேன் உன்னை விரும்பியதற்கு
பேனா முனையின் துணை போதும்,
பாதை கடந்து செல்வேன்!
Comments