இமயங்கள் அனைத்தும் குனிந்துப் பார்க்கும்,
உன் இமைகள் மூடி திறக்கும் அழகை காணவே!
நீ வெளிவரும் நொடியை அறிந்த மழைத்துளிகள்,
உன் நெற்றிப்பொட்டில் முத்தம் வைத்து வாழ்த்து பாடும்!
உதிர்ந்த பூக்கள் எல்லாம் மிதியடியாய் மாறட்டும்,
உன் பாதம் தாங்கும் பூமி புண்ணியம் தேடட்டும்!
தேவதைகள் அனைத்தும் காவல் காக்கட்டும்,
உன் தும்மல் ஒவ்வொன்றுக்கும் ஆயுள் கூறட்டும்!
வான் சூரியனே உன் வியர்வை துளிகளுக்கு ஏங்கும் வேளையில்,
போதி மரமெல்லாம் உன் பின் நின்று குடை பிடிக்கும்!
இன்று உன் வருகையை ஒட்டுக்கேட்ட உலக பூக்களுக்குள் போர்களமாம்,
உன் கூந்தல் முடியை தழுவி வாசம் தேடவே!
இயற்கை கொண்டாடும் இளவரசியே,
என்னை மணக்க சம்மதமா?
காதோரம் கூறினால் போதும்,
கட்டி அணைத்துக்கொள்வேன்!
Comments