காலை நேரம் தூக்கம் போக,
எந்தன் கண்கள் உன்னைத் தேட!
காதல் மோகம் நம்மை ஆள,
காலம் தாண்டிக் காதல் வாழ!
நான் கேட்க விரும்பும் நான்கைந்து வார்த்தைகள்,
என் செவியோடு நீ கூற வேண்டும்!
கூறும் வார்த்தைகளின் எடையை தாங்கவே,
என் காகிதங்கள் ஏங்கும்!
இரவு நீ, வெளிச்சமும் நீ!
இமைகள் மூடாமல் ரசித்தேன்!
முதலும் நீ, முடிவும் நீ!
இரண்டுக்கும் நடுவில் நான் வசித்தேன்!
காற்றோடு காற்றாய்,
கவியோடு கவியாய்,
தினமும் உன்னைத் தொழுவேன்!
நீ துள்ளிக் குதித்து திரும்பிப்பார்த்துக் கொடுக்கும் உன் புன்னகை ஒன்றே போதும்,
என் உயிரின் தாகம் எல்லாம் தீரும்!
நீ தத்தித் தழுவித் தாங்கிப்பிடிக்கும் நம் காதல் ஒன்றே போதும்,
என் நாட்கள் எல்லாம் வாழும்!
Commentaires