மனதின் ஆயிரம் கேள்விகளுக்கு
மனம் தளராமல் பதில் கூறும்
தனிமையின் தோழன் நீ!
சிறகை விரித்து பறக்கச் செய்பவளும் நீ!
சிந்தனையின் வெளிப்பாடாய்
சிரிப்பவளும் நீ!
சில நேரம் கண்ணீர்
சில நேரம் சிறு புன்னகை..
இரண்டுக்கும் நடுவில்
இருதயத்தின் அகராதியாய் நீ!
மனிதன் வாழ்ந்து முடிந்த பின்னும்
மீதம் இருப்பது நினைவுகள் நீ மட்டுமே!
இத்துனை பெருமையா உமக்கு????
நினைவுகளின் துணையோடு....
Comments