இனி எல்லாம் நீயே!
எதுவரை போவோம் என தெரியாத போதிலும்,
எதையும் கடந்து போவோம்....கைகள் கோர்த்த படியே!
உனக்காக நான், எனக்காக நீ,
நமக்காக காத்திருக்கும் நம் காதல் உலகம்!
நீ புன்னகைத்து மின்னும் உன் தெற்றுப்பல்லின் வெளிச்சம் ஒன்றே போதும்,
பூட்டிய கதவுகள் தானாக திறக்கும்!
இனி பூத்துக்கிடந்த பூக்கள் எல்லாம் பூமழையாய் உன் மேல் கொட்டவே,
காத்துக் கிடந்த என் கைகள் இரண்டும் உன்னை அள்ளிக் கொஞ்சும்!
நம் நெற்றிப்பொட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசவே,
கண்ணீர் துளிகள் ஆனந்த அருவியாய் கொட்டும்!
இனிதே துவங்குவோம்,
புதிய ஒரு வாழ்வினை!
எப்பொழுதும் எல்லாமாக நீ இருக்க,
இனி வேறென்ன வேண்டும்?
Kalakkal