நதி தீண்டி நகர்வலம் போகும் நந்தவனத் தேரே,
நகராமல் நின்று ரசிப்பேன்!
நடுநிசியில் கவி பாடும் செந்தமிழ்க் காற்றே,
நடுக்கத்தில் உறக்கம் தொலையும்!
நீ நெஞ்சுக்குள் நுழைந்துவிட தேர்வு எதுவும் இல்லையே,
நிகர் உமக்கு நீயே!
நல்லிசை பாடும் உன் தமிழுக்கு நான் நடனங்கள் ஆடி,
நிழல் போல பின் தொடர்வேன்,
நாமாக மாற, நலமாக வாழ!
Comments