அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற,
அடி நெஞ்சில் ஒரு மயக்கம்!
புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில்,
பூகம்பம் வெடிக்கும்!
இயற்கையின் சிறு அசைவையும் இவள் ரசிக்க,
எதிர்பாரா காதல் பிறக்கும்!
குழல் ஓசைக்கு நிகராக இவள் குரல் ஒலிக்க,
என் மனம் துடிக்கும்!
இவள் சிரிப்பென்ற ஒற்றை பொறி போதும்,
என் உடல் காணாமல் போகும்!
மீண்டு எழாமல் இருக்க,
என் இதயம் விரும்பும்!
சொல்லாத நூறில் மறைய,
இக்காதல் ஒன்றாக ஆகும்!
Comments