விரலுக்குள் இவன் வரும் நேரம்,
விரிசல்கள் இதயத்தில் தொடங்கும்!
நஞ்சு என அறிந்தும்,
நெஞ்சம் இவனைக் கெஞ்சும்!
போகும் இடம் எங்கும்,
புகை மூட்டம் தலை நீட்டும்!
ஆண் என, பெண் என,
இவன் கண்கள் அறியாது!
சிறந்தவன், தாழ்ந்தவன்,
இவன் அகராதியில் கிடையாது!
எனினும்,
அசுரனாய் மாறி,
ஆயுளை ஆளுவான்!
இவனை விட்டு தூரம் செல்ல,
விடியல் உமக்குத் தேவை எனில்,
இமைகளை மூடி இனிய உறவினைத் தேடு,
இதயம் தானாய் மீண்டு எழும்!
Comments