நீரின் ஆழம் கடல் போல் இருந்தாலும்,
நீர் மேல் பூத்த தாமரை போல் நிமிர்ந்து நிற்கிறாய்!
அடி மனதின் ஆழம் வரை சென்று
அழகாய் மிதக்கிறாய்!
இது என்ன?
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் நடக்கும் விதியின் விளையாட்டா?
என் உள்ளம் சுற்றி வளம் வரும் சுதந்திர பறவை நீ!
உன் உதிர்ந்த சிறகுகள் போதும், உதித்து எழுவேன்!
ஓர் இரு வார்த்தைகள் போதாது உன்னை புகழ்ந்துரைக்க,
மொத்தத் தமிழையே கொண்டு வருவேன்!
சிறிது அருகில் வந்து உன் இதழினுள் இரு கவிதைகள் எழுதவா?
சற்றும் தயங்காமல் உன் இதழே இரு கவிதை என்று சொல்லவா?
வியந்து நிற்கிறேன்....விடை கொடுப்பாயா?
Commenti