அன்னையின் அன்பு, கேட்கும்படி பேசும், அதை நம் இதயம் அறியும்! தந்தையின் அன்பு, மௌனம் காக்கும், அது கண்களை மட்டும் அடையும்! ஏதோர் காரணத்தால் மனம் வாடிப் போகும், நம் தொண்டைக் குழியில் சொற்கள் சிக்கித் தவிக்கும், கண் இமைக்கும் நொடியில், அன்னை செவிகளை அடையும்! எனினும், நம் குறைகளை அறிந்த இவள் இதயம், இவள் சுமைகளை மறைத்து வைக்கும்! மனம் அறிந்துக் கொள்ளும் தருணம், அது கண்ணீர் மழையில் நனையும்! விவரம் அறியாமல் வரும் கோபம்,
நம் மூளையைத் தப்பி ஓடும்!
இடி தாங்கும் இதயமாய் நடுவில்,
தந்தை பொறுமை நின்று பேசும்!
நம் தவறை உணர்ந்த பின்னே,
மனம் சோகம் அடைந்து சாயும்!
எனினும் தந்தையின் கைகள்,
நம்மைத் தட்டிக் கொடுத்துக் கொஞ்சும்!
Comments