இரவு பகல் இரண்டும்,
இவள் விழியில் அடங்கும்!
சுகம், வலி, எனச் சுழலும்,
மனம் இவளுக்கெனத் தவழும்!
அகம், புறம், என முழுதும்,
இவள் குணம் அறத்தில் திகழும்!
இடி, மழை, இவை பிறக்கும்,
பெண் சினம் அதில் இனி குளிரும்!
கதை, விடுகதை, இவை இரண்டும்,
இவள் இமை அசைவில் தொடரும்!
கடல் அலை புருவம் உயர்த்தும்,
இவள் நடை அசைவில் சிலிர்க்கும்!
நேர்மறையான இவள் பேச்சை,
என் செவி இரண்டும் சுவைக்கும்!
விலை மதிப்பில்லா பெண் சிரிப்பை,
என் விழிகள் என்றும் ரசிக்கும்!
இவள் வாழ்வின் திரைக்கதையோ,
எளிதாய் புகழ் படைக்கும்!
Comments