மூச்சுக் காற்றுக்கு இடையே முந்நூறு முத்தங்கள் போதும்,
முழுதாய் மூழ்கி விடுவேன்!
முதுமையில் கூட உன் முகம் பிடித்துக் கொஞ்சிக்கிள்ளும் கணவனாய் நான் இருக்க,
முப்பொழுதும் என் கற்பனைக்கு சொந்தமாய் நீ இருக்க,
இனி போகும் காலம், இறவா காலம்!
தாரமாகவும் நீ தாயாகவும் நீ,
தத்தளிக்கிறேன்!
துளி அளவும் சந்தேகம் வேண்டாம்,
நான் பேசும் காதல் பாஷையில்!
என் தமிழுக்கு தெரியும்,
என் காதலின் ஆழமும், உண்மையும்!
இன்னும் சொல்வேன், ஆனால்
நாட்களும் போதாது, நொடிகளும் போதாது!
Kommentarer